|
ராமனை விட யார் உயர்ந்தவர் என்றால் அனுமன் தான் என்றுசொல்லலாம். அனுமன் சீதையிடம் ராம தூதராகச் சென்றார். அவரிடம், என் கணவர் எப்படியிருக் கிறார்? என்று கண்ணீருடன் நலம்விசாரித்தாள் சீதை. அம்மா! ராமபிரானுக்கு தூக்கமே வருவதில்லை. அவர் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறார். தப்பித்தவறி கண்மூடினாலும் கூட, விழிக்கும் போது சீதா...சீதா என்று புலம்பிக் கொண்டே தான் எழுந்திருக்கிறார், என்றார். இதேபோல ராமனிடம் வந்த அனுமன், எம்பிரானே! சீதாதேவி எப்போதும் தங்கள் நினைவாகவே இருக்கிறாள். கொடிய அரக்கர்கள் மத்தியிலும், தன் கற்பைக் காப்பாற்றி வருகிறாள். அரக்கிகள் இழைக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமில்லை என்றாலும், அவற்றைப் பொறுத்துக் கொள்கிறாள், என்று நல்வார்த்தை சொன்னான். திருமால், ராமாவதாரம் எடுத்து எப்படி தூது போக வேண்டும் என்பதை அனுமனிடம் தான் கற்றுக்கொண்டாராம். ஏனெனில், அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் அவரும் துரியோதனனிடம் தூது போக வேண்டியிருந்ததல்லவா! ஆனால், அனுமனின் தூது வெற்றி பெற்றது. ராமன் ராவணனை ஜெயித்தான். சீதை மீட்கப்பட்டாள். கிருஷ்ணதூது தோல்வியடைந்தது. பாண்டவர்-கவுரவர் போர் மூண்டது. தன் பக்தனின் பெருமையை உயர்த்த தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டான் பகவான். |
|
|
|