Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வைராக்யமாய் வாழ!
 
பக்தி கதைகள்
வைராக்யமாய் வாழ!

ஒரு நாட்டில் பர்த்ரு ஹரி என்பவர் அரசாட்சி செய்து கொண்டிருந்தார். இவர் மிகப்பெரிய அரசராக இருந்தவர். இவர் வாழ்வில் நடந்த ஒரு செயல் இவருடைய வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. ஒரு முறை ஒரு சன்யாசி அரண்மனைக்கு வந்தார். அரசர் எழுந்து சன்யாசியை வணங்கி பணிவுடன் உபசாரம் செய்தார். மகிழ்ந்த சன்யாசி, நீண்ட காலம் வாழவைக்கும் தெய்வீகப் பழம் ஒன்றை அரசருக்குக் கொடுத்தார்.

அரசருக்கு மிக அழகியான மனைவி இருந்தாள் அவளை மிகவும் விரும்பிய அரசர், தனக்குத் தந்த பழத்தை சாப்பிடும் தகுதி, மனைவிக்கே உண்டு என அவளிடம் கொடுத்தார். அவள் வெகு காலம் வாழட்டும் என ஆசைப்பட்டார். ராணிக்கு அவள் விரும்பும்போது வெளியே செல்ல அரசர் அனுமதி கொடுத்து இருந்தார். ராணியோ தன்னை அழைத்துச் செல்லும் தேரோட்டியை விரும்பினாள். அவன் நெடுங்காலம் வாழ வேண்டுமென அப்பழத்தை தேரோட்டியிடம் கொடுத்தாள். தேரோட்டியோ ஒரு தாசியுடன் சினேகம் வைத்திருந்தான். அவள் நெடுங்காலம் வாழணும் என பழத்தை அவளிடம் கொடுத்தான். தாசியோ, எனக்கு எதற்கு இப்பழம்? நான் வாழ்ந்தால் பலர் வாழ்வு நசிக்கும். நம் அரசர் அறநெறி தவறாது ஆள்கிறார். அவர் நீண்ட காலம் வாழணும்.... என பழத்தை அரசரிடம் அளிக்கிறாள்.

அரசருக்குத் தலை சுற்றியது. நிகழ்ந்ததை அறிந்தார். வாழ்க்கையிலே விரக்தி ஏற்பட்டது. யாரும் யாருக்கும் சொந்தமல்ல என்ற உண்மையை உணர்ந்தார். நொடியிலே மறையும் சுக போகங்கள் வேண்டாம் என அரசைத் துறந்து, சன்யாசியாகி கானகம் சென்றார். தியானம், தவம் ஏற்றார். ஆத்ம ஞானம் பெற்றார். வைராக்ய சதகம் என்ற நூலை எழுதி பாரதத்திலே புகழ் பெற்ற கவிஞரானார். இவர் ஒன்பது விதமாக பயம் இருக்கிறது என்று கூறினார். போகி, நோயைக் கண்டு பயப்படுகிறான். குலப்பெருமை உள்ளவர்களுக்கு அதற்கு இழுக்குவரும் என பயம். செல்வந்தர்களுக்கு அதிகாரிகளிடம் பயம். தன்மானம் உள்ளவனுக்கு அவமானம் கண்டு பயம். பலமுள்ளவனுக்கு எதிரி கண்டு பயம். அழகுள்ளவனுக்கு மூப்பு கண்டு பயம். புலமை உள்ளவனுக்கு அறிஞனைக் கண்டு பயம். நற்குணம் உள்ளவனுக்கு தீய குணம் கண்டு பயப்படுகிறான். வைராக்யம் ஒன்று தான் பயமின்மையை அளிக்கவல்லது என்கிறார் பர்த்ரு ஹரி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar