|
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மழை பொழியக் கூடாது என்று ஒருமுறை சிவபெருமான் சாபம் இட்டார். திருமால் சங்கு ஊதினால் மழை பெய்யும் என்பதற்காக, திருமாலிடமும் தனது சாபத்தைக் கூறி சங்கு ஊத வேண்டாம் என வேண்டிக்கொண்டார். சாபத்தை அறிந்த உழவர்கள். தங்கள் ஏர் முதலான கருவிகளை மூலையில் முடக்கி வைத்தனர். ஒரே ஒரு உழவன் மட்டும் மழை பற்றிக் கவலைப்படாமல் வயலில் உழுது கொண்டிருந்தான். இதுபற்றி அவனிடம் சிலர் கேட்டபோது, 12 ஆண்டுகள் ஏர் உழாமல் இருந்தால், பிறகு ஏர் உழுவது எப்படி என்பது மறந்து போய்விடும் என்றானாம். இந்த பதில் திருமாலின் காதில் விழ 12 ஆண்டுகள் சங்கு ஊதாமல் இருந்தால், சங்கு ஊதுவது எப்படி என்பதையே நாமும் மறந்து விடுவோம் என்று நினைத்து. சிவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து சங்கை எடுத்து ஊதினாராம். எனவே மேகங்கள் திரண்டு மழை கொட்டியது. (மறதி நம் திறமையை இழக்கச் செய்யும்) |
|
|
|