Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வியாச காசி!
 
பக்தி கதைகள்
வியாச காசி!

காசியில் பசித்த வேளைக்கு உணவு கிடைப்பது சந்தேகம் என்ற அவநம்பிக்கையுடன் புறப்பட்டு வந்தீர்கள். இங்கு வந்ததும் அதே எண்ணம் தான் தங்கள் மனதில் இருந்தது. உங்கள் எண்ண அலைகளே உங்களை அல்லாட வைத்தன. இனியும் சோதிக்கக் கூடாது என்று, நீங்கள் சாபமிடுவதற்கு முன், உங்களை அழைத்து உணவு பரிமாறினேன். இனியாவது முழு நம்பிக்கையுடன் இருங்கள். வேதங்களைப் பலவாறு பிரித்து அனைவரும் எளிதில் புரிந்துகொள்ள வழி வகுத்தவர் மகரிஷி வியாசர். ஒருநாள் சீடர் ஒருவன் குருவே காசியில் புனித நதி கங்கை ஓடுவதாகச் சொல்கிறார்கள். அங்கே பசித்த வேளைக்கு எல்லோருக்கும் உணவு கிடைக்கும் என்கிறார்களே! இது நிஜமா? என்று தன் சந்தேகத்தை கேட்டான். அப்படித்தான் சொல்லப்படுகிறது. காசிக்குச் சென்று சோதித்துப் பார்த்துவிட்டால் போகிறது. வாருங்கள் இன்றே காசி நோக்கிப் பயணிக்கலாம் என்று புறப்பட்டார் வியாசர். வழி நெடுக, பல திருத்தலங்களைத் தரிசித்தபடி வியாசரும், அவரது சீடர்களும் காசி மாநகரத்துக்கு வந்தார்கள். கங்கையில் நீராடினார்கள். சீடர்களே, நீராடியதும் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. முதலில் உணவு கிடைக்கிறதா பார்க்கலாம் என்ற வியாசர், சீடர்களுடன் புறப்பட்டார்.

ஒவ்வொரு வீட்டின் வாசல் முன் நின்று பார்த்தும், யாரும் அவர்களை அழைக்கவில்லை. ஒரு சிலர், அவர்கள் கூட்டமாக வருவதைப் பார்த்ததுமே, வீட்டின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்று விட்டார்கள். வியாசருக்கு ஏமாற்றமாக இருந்தது. பசி வேறு கடுமையாக எடுக்கவே. கோபம் கோபமாக வந்தது. அப்பொழுதே நினைத்தேன். இங்கு பசித்த வேளைக்கு உணவு கிடைப்பது சந்தேகம்தான் என்று. இந்தக் காசியில் பசித்த வேளைக்கு எங்கே அன்னம் கிடைக்கப்போகிறது? நாமே ஒரு காசியை ஏற்படுத்தினால்தான் அது நிறைவேறும் என்றவாறே, காசி மாநகரை சீடர்களுடன் வலம் வந்தார். எங்கும் பசிக்கு உணவு கிடைக்கவில்லை. கடும் கோபம் ஏற்பட்டது அவருக்கு சாபம் கொடுப்பதற்காக, இந்தக் காசியில்.... என்று அவரது வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்த வேளையில், பசித்த வேளைக்கு உணவு கிடைக்கும். வாருங்கள் என் வீட்டுக்கு என்று ஒரு பெண்மணி அவர்களை அழைத்தாள். வியாசருக்கு ஆச்சர்யம்! அவர்களை அன்புடன் வரவேற்ற அந்தப் பெண்மணி அவர்கள் முன் தலைவாழை இலையை விரித்து அதில் இன்ப்புகளையும், பல்வேறு பதார்த்தங்களையும் பரிமாறி, அன்னம் இட்டாள். வியாசரும் அவரது சீடர்களும் திருப்தியாக சாப்பிட்டார்கள்.

உணவு மிகவும் பிரமாதமாகவும் ருசியாகவும் இருக்கிறதே! இந்தப் பெண்மணிக்கு இங்கு யாரும் துணையாக இல்லையே? என்ற சந்தேகம் வியாசருக்கு எழவே, கண்களை மூடி சில விநாடிகள் தியானித்தார். தாயே உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் அன்னை விசாலாட்சிதானே? என்றார் புன்னகைத் தான் அன்னை. ஒரு சந்தேகம். நாங்கள் பசியுடன் பல மணி நேரம் உணவுக்காக அலைந்தபோது, எங்களை வரவேற்காத தாங்கள், இப்பொழுது....? ஏன் அழைத்தாய் என்பதுதானே கேள்வி? முனிவரே! எதிலும் முழு நம்பிக்கை வேண்டும். இங்கே வருவதற்காகப் புறப்படும் போது காசியில் பசித்த வேளைக்கு உணவு கிடைப்பது சந்தேகம் என்ற அவநம்பிக்கையுடன் புறப்பட்டு வந்தீர்கள். இங்கு வந்ததும் அதே எண்ணம்தான் தங்கள் மனதில் இருந்தது. உங்கள் எண்ண அலைகளே உங்களை அல்லாட வைத்தன. இனியும் சோதிக்கக் கூடாது என்று, நீங்கள் சாபமிடுவதற்கு முன், உங்களை அழைத்து உணவு பரிமாறினேன்.

இனியாவது முழு நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறிய அன்னை விசாலாட்சி விஸ்வநாதருடன் தரிசனம் தந்தாள். அம்மா! தாயே! நீ விசாலாட்சி மட்டுமல்ல; அன்னம் அளிக்கும் அன்னபூரணி என்று தொழுதார் வியாசர். பிறகு கங்கை நதியின் கிழக்குப் பகுதிக்குச் சென்றார். அந்தப் பகுதியை தன் சீடர்களுடன் சீர்திருத்த ஆரம்பித்தார். நாட்கள் நகர்ந்தன. காலம் கடந்தது. காசியில் கங்கை நதி ஓடும் கிழக்குப் பகுதி மிகவும் செழிப்பாகவும் பிரகாசமாகவும் திகழ்ந்தது. மக்கள் அங்கு திரண்டுவர ஆரம்பித்தார்கள். இதனால், விஸ்வநாதர்-விசாலாட்சி அருள்புரியும் காசி, தன் புகழை இழந்து கொண்டிருந்தது. இதைக் கண்டதேவர்களும் ரிஷிகளும் தங்கள் மனக்குறையை ஈசனிடம் கூறினர். அவர் வழிகாட்டுதலின் பேரில், விநாயகரைச் சென்று சந்தித்தார்கள். விநாயகரும் அருள்புரிவதாகக் கூறினார்.

ஒருநாள் வியாசர் மனத்தில், தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் திடீரென மேலோங்கியது. அப்பொழுது ஒரு சிறுவன் வியாசரிடம், ஐயா, இந்தப் பகுதி ஒரு காலத்தில் காட்டுப் பகுதி யாக இருந்ததாமே! இதை நீங்கள்தான் சீர்திருத்தி ஒளி பொருந்திய தலமாக மாற்றியதாகப் பேசிக் கொள்கிறார்களே! இது உண்மையா? ஆமாம்! அதற்கென்ன? என்றார் அகந்தையுடன். இங்கு உங்களைத் தரிசித்தாலே அனைத்துப் பாபங்களும் நீங்கிவிடும் என்கிறார்களே! என்றான் அவன் மீண்டும். ஆமாம் என்றார் வியாசர் அதே தொனியில் இங்கு இறந்தால் அவர்கள் சொர்க்கம் செல்வதாகவும் அதற்கும் தாங்கள்தானே காரணம்! ம்.... ம்... ஆமாம்..... ஆமாம்...... என்றார். இங்கு உங்களைச் சிந்தித்தவர்களுக்கு மோட்சம் கிடைக்காவிட்டால், என்ன பிறவி கிடைக்கும்? என்று அடுத்துக் கேட்டான் சிறுவன். வியாசர் மவுனித்தார். சிறுவன் விடவில்லை. இந்த ஒரே கேள்வியைப் பலவாறாகக் கேட்டான் சிறுவன்.

வியாசருக்குள் சினம் மூண்டது. அப்பொழுது ஒரு கழுதை குரல் எழுப்பிக்கொண்டு ஓடியது. கோபத்திலிருந்த வியாசர் கழுதைப் பிறவி கிடைக்கும் என்றார். அப்படியே நடக்கட்டும். தங்கள் வாக்கு பலிக்கட்டும் என்று சொல்லியவாறே மேற்கு நோக்கிச் சென்று மறைந்தான் அந்தச் சிறுவன். சுய நிலைக்கு வந்த வியாசர்,  தன் வாக்கு பலிக்காமல் இருக்க இறைவனிடம் மனமுருகினார். வருந்த வேண்டாம் வியாசரே! எங்களைத் தரிசிக்க வருபவர்கள் எங்களைத் தரிசித்த பின், இங்கு வந்து தங்களைத் தரிசித்தால்தான் காசிக்கு வந்த பலன் முழுமையாகக் கிட்டும். இத்தலம் வியாச காசி என்று வரும் காலத்தில் புகழ்பெறும் என ஆசியருளினர் விஸ்வநாதரும் விசாலாட்சியும். கங்கை நதியோரத்தில் வியாசரின் நினைவிடமான வியாச காசி உள்ளது. இந்த நினைவிடத்திற்கு பக்தர்கள் வந்து வழிபட்டு மானசீகமாக வியாசரிடம் வாழ்த்து பெறுகிறார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar