|
அந்த ஏழைக் குடியானவன் சந்தைக்குப் போய் விட்டுத் திரும்பும்போது, வழியில் வண்டிச் சக்கரம் கழன்று போய்விட்டது. காட்டின் மத்தியில் சிக்கிக் கொண்ட குடியானவன், தன் தொழுகைப் புத்தகத்தை எடுத்து வராததை உணர்ந்தான். கடவுள் வணக்கம் செய்யாமல் நாள் கழிந்துவிடுமே என வருந்தினான். கடைசியில் கடவுளிடம், ஆண்டவனே!! எனக்குப் புத்தகம் பார்க்காமல் ஒரு ஸ்லோகம் கூட சொல்லத் தெரியாது. அதனால் ஒன்று செய்கிறேன். எல்லா எழுத்துக்களையும் ஐந்து முறை நிதானமாகச் சொல்கிறேன். உனக்குத்தான் எல்லா ஸ்லோகங்களும் தெரியுமே! நீயே அந்த எழுத்துக்களைச் சேர்த்து ஸ்லோகமாக்கிக் கொள்! என்று மனதார வேண்டினான். கடவுள், தேவதைகளிடம் சொன்னார், இதுவரை நான் கேட்ட எல்லா பிரார்த்தனைகளிலும் இதுவே சிறந்தது. ஏனெனில் இது ஒரு எளிய, களங்கமற்ற, நேர்மையான உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்தது! |
|
|
|