குரு÷க்ஷத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. கவுரவர்களின் படையைச் சேர்ந்த யானைகள் சுற்றி நின்று பாண்டவர்களைத் தாக்கின. அசகாய சூரனான பீமன் யானைக்கூட்டத்துக்கு நடுவே பாய்ந்தான். ஒரு யானையின் காலைப்பிடித்து தூக்கினான். கரகரவென சுற்றினான். மேலே நோக்கி வீசினான். அன்று வீசப்பட்ட யானை இன்று வரை கீழே விழவேயில்லை. காரணம், அது பூமியின் ஆகர்ஷண பகுதியையும் தாண்டி வெகுதூரம் போய்விட்டது. தர்மத்தைக் காப்பதற்காக, பகவான் கிருஷ்ணர் அத்தகைய சக்தியை பாண்டவர்களுக்கு அளித்திருந்தார்.
குரு÷க்ஷத்திரம் மிகவும் புண்ணிய பூமி. காசியில் தரைத்தளத்தில்(பூமி) இயற்கை மரணம் நேர்ந்தால் முக்தி, பிரயாகையில் தரைத்தளம், அங்கு ஓடும் ஆறு.. எதில் மரணம் சம்பவித்தாலும் முக்தி தான். குரு÷க்ஷத்திரம் தர்மபூமி என்பதால் தரை, தீர்த்தம், ஆகாயம் எங்கு இறந்தாலும் முக்தி கிடைக்கும். ஏனெனில், அது கிருஷ்ணர் நின்ற பூமி. குரு÷க்ஷத்திர போரில் இறந்த எல்லாருமே, கடைசியாக கிருஷ்ணனின் திருமுகத்தைப் பார்த்தபடி இறந்ததால், மோட்சத்தை எட்டினர். கிருஷ்ணனின் திருவடி நமக்கு பிறப்பற்ற பேரானந்த நிலையை அருளும்.