Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!
 
பக்தி கதைகள்
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!

சில சமயங்களில், நாம் கடவுளிடம் ஜெபித்தவுடன் கோரிக்கைகள் நிறைவேறி விடும். அந்த மகிழ்ச்சியில், கடவுளுக்கு நன்றி சொல்லக்கூட மறந்து விடுவோம். மேலும், கடவுள் நமக்கு கொடுத்த பலனின் ஒரு சிறு பகுதியைக் கூட மற்றவர்களுக்கு தரமாட்டோம். இவையெல்லாம் பாவம் என்பதை நாம் உணர்வதில்லை. மேலும், பலன் கிடைத்த மகிழ்ச்சி யைக் கொண்டாட தேவையற்ற பார்ட்டி நடத்துவோம். பாவங்களை வரிசையாக செய்வோம்.இப்படியே, மேலும் மேலும் கோரிக்கைகளை கடவுளிடம் வைக்க வைக்க, அவரும் நிறைவேற்றி கொண்டே இருப்பார். ஒருமுறை, மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைக்கிறோம். கடவுளே! என் குழந்தைக்கு உடம்புக்கு முடியவில்லை. அவனுக்கு ரிஸ்க்கான ஆப்பரஷேன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்கிறார். அவ்வாறு நடந்தாலும், அவன் ஊனமாகலாம் என்கிறார். ஊனத்துடன் அவனைக் காணும் சக்தி என்னிடமில்லை. கர்த்தாவே அவனை ஆசிர்வதியும், என கேட்போம். ஆனால், நம் ஜெபத்திற்கு பலனிருக்காது. டாக்டர் அந்தக் குழந்தையின் உறுப்பை வெட்டி எடுத்திருப்பார். அதைப் பார்த்து பார்த்து மனம் புழுங்கும்.ஆண்டவரே! என்னை இப்படி சோதித்து விட்டீரே என புலம்புவோம். ஏன் ஆண்டவர் இப்படி செய்தார் என நினைத்துப் பார்க்க வேண்டும். நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் திரிய வேண்டும்? என்று சொல் லுகிறேன் என்ற வசனம் வருகிறது. இதுபோலவே நாமும் புலம்புவோம். எனவே, நமக்கு நன்மை நடக்கும் போது, அந்த நன்மைகளை அடைவதற்காக நாம் செய்த பாவங்களின் பட்டியலைக் கணக்கிட வேண்டும். மீண்டும் அதுபோன்ற பாவம் செய்யாமல் இருக்க உறுதி எடுக்க வேண்டும். செய்த பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar