|
சீடன் ஒருவன் தன் குருவிடம், சுவாமி, உங்களைப் போன்ற குருமார்கள், தாங்கள் நடந்த பாதையிலேயே சீடர்களை அழைத்துச் செல்வது ஏன்? அவர்கள் புதியபாதையில் போவது தவறா? என்று கேட்டான். அவனுக்கு பதில் சொல்லாத குரு, மறுநாள் அவனை கல்லும் முள்ளும் நிறைந்த ஒரு பாதை வழியாக அழைத்துப் போனார். நடக்க மிகவும் சிரமப்பட்ட சீடன், இந்த இடத்திற்குத்தான் வேறு நல்ல பாதை இருக்கிறதே.. ஏன் இவ்வளவு கடினமான வழியில் செல்லவேண்டும்? என்று கேட்டான். குரு சொன்னார், ஓரிடத்திற்குச் செல்ல பலரும் நடந்து பழக்கப்பட்ட பாதையில் சென்றால் சுலபமாகச் செல்லலாம். புதிய பாதை கரடு முரடாக, பயணத்தைத் தொடரமுடியாதபடிகூட இருக்கலாம் என்பது தெரிகிறது அல்லவா? குருமார்கள் தாங்கள் கண்டறிந்த எளியபாதையில் சீடர்களைச் செல்ல அறிவுறுத்துவதும் அதனால்தான்... புரிந்ததா? உணர்ந்த சீடன் அவரை வணங்கினான். |
|
|
|