|
ஓர் ஏழை, தன் குடிசைக்கு அருகே இருக்கும் கோயிலுக்கு பலரும் செல்வதை, தினமும் பார்த்தான். தானும் ஒருநாளாவது அங்கே செல்லவேண்டும் என ஆசைப்பட்டான். அவனது ஆசைப்படியே ஒருநாள் கோயிலுக்குச் சென்றான். அங்கே, பலரும் இறைவனுக்கு விதவிதமான காணிக்கைகள் தருவதையும், வசதிக்கு ஏற்ப ஆராதனைகள் செய்வதையும் பார்த்தான். கடவுளுக்கு எதையுமே தரமுடியாதபடி இருக்கும் தன் வறுமை நிலையை நினைத்துக் கண்ணீர்விட்டான். அப்போது, திடீரென அவன் முன் வந்தார் கடவுள். பக்தனே, தூய்மையான அன்புடன் சிந்தும் கண்ணீரே எனக்கு மிகவும் பிரியமான காணிக்கை. அதனை நீ அளித்திருக்கிறாய் என்றபடியே அவன் கண்ணீரைத் தமது கைகளில் ஏந்தி நின்று, அவனது வறுமை நீங்க ஆசிர்வதித்து மறைந்தார். |
|
|
|