|
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாவீரர் இதற்கெல்லாம் பயந்தவரல்ல. ஒருமுறை சண்டகவுசிகன் என்ற பாம்பு அவரை நோக்கி வந்தது. மகாவீரர் அதைப் பார்த்தாலும் பயந்தோடவில்லை. சீறிய பாம்பு, அவரது கால் கட்டை விரலில் தீண்டிவிட்டது. அப்போது மகாவீரர், பாம்பே! நீ பிறரை நேசிக்க வேண்டுமே தவிர, இவ்வாறு இம்சை செய்யக்கூடாது. நீ என்னைத் தீண்டிவிட்டாய் என்பதற்காக. நான் ஒன்றும் இறந்து விடமாட்டேன். உன் விஷம் என்னை ஒன்றும் செய்துவிடாது. இப்படி, நீ செய்யச்செய்ய உன் பாவக்கணக்கு தான் கூடும். பாம்பாய் பிறந்தாலும், உனக்கு தரப்பட்டிருக்கும் அறிவைக் கொண்டு ஆத்மாவைப் பற்றி சிந்தனை செய். உன்னைக் கண்டால் மக்கள் பயந்தோட வேண்டும் என்ற சிந்தனையை விட்டு விடு. நீ பிறரிடம் அன்பு செலுத்தினால், பிறரும் உன்னிடம் அன்பு செலுத்துவார்கள், என்றார். அந்த பாம்பு அங்கிருந்து ஓடி விட்டது. |
|
|
|