|
ஒரு ராஜகுமாரன் லட்சுமிதேவியை வேண்டி தவமிருந்தான். தேவியும் பிரசன்னமாகி, மகனே! என்ன வரம் வேண்டும், கேள், என்றாள்.அம்மா! என் தந்தை பெரிய சக்கரவர்த்தி. உலகம் அனைத்தையும் பிடிப்பதற்காக, ராஜதர்மத்தின் படி, அஸ்வமேத யாகம் நடத்தினார். யாகம் நடக்கும் வேளையில், அவர் இறந்து விட்டார். நான் பதவிப்பொறுப்பேற்று, யாகத்தைத் தொடர்ந்தேன். அப்போது அனுப்பிய குதிரையை யாரோ திருடிச் சென்று விட்டனர். அதைக் கண்டுபிடித்து தர வேண்டும். யாகம் வெற்றியடைய வாழ்த்த வேண்டும், என்றான்.லட்சுமியும் அவ்வாறே அருளி,நீ இவ்வூர் எல்லையில் இருக்கும் மகானைப் பார். அவர் உனக்கு வழிகாட்டுவார், என்றாள்.ராஜகுமாரனும் மகானைச் சந்தித்தான். அவர் தன் ஞானசக்தியால், குதிரை இந்திரனிடம் இருப்பதை அறிந்து, சக்திமிக்க சீடர்களை அனுப்பி அதைக் கொண்டு வந்து விட்டார். அவரது மகிமையை அறிந்த ராஜகுமாரன், முனிவரே! என் தந்தையின் உடலை தைலங்கள் இட்டு பாதுகாத்து வைத்துள்ளேன். அவரை உயிரோடு எழுப்பினால், அவரது அஸ்வமேத யாகக்கனவு பலித்து விடும், தாங்கள் அருள்வீர்களா? என பணிவுடன் கேட்டான். அவன் கேட்டபடியே சக்கரவர்த்தியை உயிருடன் எழுப்பினார் மகான்.ராஜகுமாரன் அவரிடம், முனிவரே! இந்த சக்தி தங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேட்டான்.மகனே! கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கும் யாரும் நினைத்ததை அடையலாம், ஜெயித்துக் காட்டலாம், என்றார். வீட்டுக்கு வீடு இனி கீதை புத்தகம் இருக்கும் தானே! |
|
|
|