|
குருவே, கடவுள் தன்னை வணங்காதவர்க்கும், எப்போதாவது மட்டுமே கோயிலுக்கு வருபவர்களுக்கும் கூட அருள்வார் என்று, எப்படிச் சொல்கிறீர்கள்? கேட்டான் சீடன். நடுப்பகல் நேரத்தில் அவனை ஒரு சாலை வழியே அழைத்துப் போனார் குரு. வெயில் தாங்காத அவன் ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கினான். குரு கேட்டார்... நீ எப்போதாவது இந்த மரத்திற்கு தண்ணீரோ உரமோ இட்டது உண்டா? அடிக்கடி நீ இங்கே வந்து இளைப்பாறுவாயா? இல்லை...! ஆனால் இந்த மரம் எப்படி உனக்கு நிழலும் கனியும் குளிர்ந்த காற்றும் தருகிறது? சீடனுக்கு கடவுளின் கருணை புரிந்தது.
|
|
|
|