|
குருகுலத்தில் தங்கிப் படித்த மாணவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஞானம் அளிப்பது குருவால் முடியுமானால், அதனை உடனே தர வேண்டியதுதானே... ஏன் இவ்வளவுகாலம் காத்திருக்க வைக்கிறார்? அதை குருவிடமே கேட்டான். குருவி முட்டை ஒன்றை அவன் கையில் கொடுத்த குரு, இதற்குள் என்ன இருக்கிறது? என்று கேட்டார்...! குருவி...! எங்கே அதை காட்டு! அது எப்படி முடியும் ? உரிய காலம் பக்குவமடைந்தால் அது தானாகவே வெளி வரும்...! அப்படித்தான் ஞானமும்... கல்வியால் பக்குவப்பட்டால் அது தானாக வருமே தவிர நினைத்தவுடன் தந்துவிட முடியாது...! சீடனுக்குப் புரிந்தது.
|
|
|
|