|
மலைமகள் மகனான முருகன் ஒரு சமயம் குன்று ஒன்றின் மீது விளையாடிக் கொண்டிருந்தார். தனியாக விளையாடுவது போரடிக்கவே, தாய் பார்வதிதேவியையும் அழைத்தார். அம்மா.. விளையாட ஏதாவது பொம்மை குடும்மா...! என்று கேட்டார் முருகன். சுற்றும் முற்றும் பார்த்தான் பார்வதி... எங்கும் மூங்கில் மரமாக இருந்தது. என்ன செய்யலாம்? யோசித்தாள். சட்டென்று ஒரு யோசனை தோன்ற, முன்பு தான் எடுத்த வண்டு வடிவினை மறுபடியும் எடுத்தாள். மூங்கில் ஒன்றைத் துளைத்தாள். முருகன் கையில் கொடுத்தாள். உமா சுதன், துளையிட்ட அந்த மூங்கிலை ஊதினான். புல்லாங்குழல் பிறந்தது அப்போதுதான். அதனால்தான், திருமுருகாற்றுப்படையில் முருகனை, குழலன்... கோட்டன்.. குறும்பல்லியத்தன்! என்று போற்றுகிறார் நக்கீரர்.
|
|
|
|