|
வியாச முனிவரின் மகனான சுக முனிவர் தந்தையின் ஆணைப்படி ஜனகரிடம் சென்று தன்னை சீடனாக ஏற்க வேண்டினார். அப்படியா! அரண்மனைக்குள் வரும்போது என்ன கண்டீர்கள்? எனக் கேட்டார் ஜனகர். சர்க்கரையிலான படிக்கட்டுகள் இருப்பதைப் பார்த்தேன். அவற்றில் ஏறி இறங்கி வந்தேன். சர்க்கரையிலான வடிவங்கள் இங்கும் அங்கும் அலையப் பார்த்தேன். தற்பொழுது சர்க்கரையிலான சிலை ஒன்று, சர்க்கரையிலான இன்னொரு சிலையுடன் பேசிக் கொண்டிருக்கிறது. சுகமுனிவரே! உமக்கு எல்லா ஞானமும் வந்துவிட்டது. குருவின் உபதேசம் தேவையில்லை. நீங்கள் போகலாம்! என்றார் சனகர். எல்லாவற்றையும் இனிமையாகப் பார்க்கத் தொடங்கி விட்டால், அவனுக்கு குரு உபதேசமே சுவாமி வழிபாடாகிவிடும்! |
|
|
|