Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பிரம்மன் தலைகொய்த ஈஸ்வரன்!
 
பக்தி கதைகள்
பிரம்மன் தலைகொய்த ஈஸ்வரன்!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்கிற நக்கீரனின் வாதம்தான் இந்து தர்மத்தின் அடிப்படை வேதாந்தம். கோபமும் ஆவேசமும் மனிதர்களுக்கு மட்டுமின்றி, கடவுளர்க்கு வந்தாலும், அதற்குரிய பலாபலன்களை அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்றே புராணங்கள் வலியுறுத்துகின்றன. மனிதர்களின் செயல்களுக்குச் சில தருணங்களில் காரண காரியங்கள் இருப்பதில்லை. ஆனால், கடவுள்களின் செயல்களுக்கு ஏதோ காரண காரியங்கள் இருக்கவே செய்யும். தர்மத்தின் அடிப்படை உண்மைகளை உலகோர்க்கு உணர்த்த, இறைவன் அவ்வப்போது நடத்திய நாடகங்களே, நமது புராணக் கதைகள். அவற்றில், தொன்றுதொட்டு தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை, வெவ்வேறு கால கட்டங்களில் பார்க்கும்போது, புதிய தத்துவங்களும் கருத்துகளும் புலனாகின்றன. இதையே, தெரிந்த புராணம், தெரியாத கதை மூலம் விளக்குகிறோம்.

பரமேஸ்வரனே பாவம் செய்த கதை ஒன்று உண்டு. ஒரு யுகத்தில், சிவபெருமானைப் போல பிரம்மதேவனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒருமுறை, கயிலாயத்துக்கு வந்த பிரம்மனை, தூரத்திலிருந்து பார்த்த பார்வதிதேவி, ஒரு கணம் சிவனென்று தவறாக எண்ணிக் கொண்டாள். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், தனக்கும் பிரம்மனுக்கும் தெளிவான வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளியெறிந்து, அவரை நான்முகனாக்கிவிட்டார்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தினைக் குறிக்கும் ஐந்து தலைகள் அவை. இவற்றில் ஆகாயத்தைக் குறிக்கும் தலையே பிரம்மனின் எண்ணம், கற்பனை, உருவாக்கும் திறன், சிந்தனா சக்தி, அறிவுத்திறன் அனைத்துக்கும் உறைவிடமாயிருந்தது. சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மனின் கற்பனைத் திறன் மே<லும் மேலும் வளர்ந்து கட்டுக்கடங்காமல் சென்றது. புல், பூண்டு, புழு, பூச்சி, பறவை, மிருகம், மனிதன் என அவன் படைப்புகள் ஒன்றைவிட ஒன்று உயர்ந்து உருவாக ஆரம்பித்தன. திறமைகள் வெளிப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சியில்தான், சில நேரங்களில் கர்வம் பிறக்கிறது. அனைத்தையும் படைத்த பெருமையில் பிரம்மனின் அகங்காரம், அவரின் ஐந்தாவது தலையைச் சற்றுக் கனக்கச் செய்தது.

தன்னையே நாபியில் உற்பத்தி செய்த, நாராயணனைக்கூட அவர் அப்போது சற்று மறந்துவிட்டார். சிருஷ்டிக்கு மூலாதாரமான பஞ்ச பூதங்களையும் படைத்த பரமேஸ்வரனையும் அவர் நினைக்கவில்லை. அனைத்தும் தன்னால் படைக்கப்பட்டது என்று அவர் எண்ணியபோது, அவர் அகந்தைக்குக் காரணமான ஐந்தாவது தலையை ஆதிசிவன் மறையும்படி செய்துவிட்டார். பிரம்மனின் அகங்காரம் எனும் தலை மறைந்தது; சிருஷ்டி புனிதமானது. ஆனால், பிரம்மனின் மறைந்துபோன தலை, ஒரு கபாலத் திருவோடு வடிவில் பரமசிவனின் வலக்கரத்தில் ஒட்டிக் கொண்டது. நன்மை கருதியே மகாதேவன் அந்தச் செயலைச் செய்தாலும், பிரம்மனின் ஒரு தலையைத் துண்டித்து மறையச் செய்ததால், பிரம்மஹத்தி என்ற பாபம் சிவனுக்கு ஏற்பட்டது. அவர் அகங்காரம் நிறைந்த பிரம்மனின் தலையை துண்டித்து, தர்மம் தவறிவிட்டார். அதற்கான தண்டனையிலிருந்தும் அவர் தப்ப முடியவில்லை. பித்தன் சிவன் பிக்ஷõண்டியாகி, பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி, பிøக்ஷ (பிச்சை) கேட்கப் புறப்பட்டார். அவன் கையில் பிரம்ம கபாலம் திருவோடாக ஒட்டிக் கொண்டது. ஸ்ரீமன் நாராயணன் திருக்கோயில் கொண்ட பத்ரிநாத் எனும் இமயத்தின் புண்ணிய பூமியில், மகேஸ்வரனின் பிøக்ஷக் கரங்கள் நீண்டன.

அங்கே தவம் புரியும் முனிவர்கள் தங்கள் கர்வத்தையும், அகந்தையையும் தானம் செய்து, இறைவனின் கையில் திருவோடாக ஒட்டிக் கொண்டிருந்த பிரம்ம கபாலத்தை நிரப்பினார்கள். எல்லாக் காலத்திலும் எல்லா விதமான மக்களும் தங்கள் அகங்காரத்தையும், ஆணவத்தையும் விட்டொழிக்க வேண்டி, ஈஸ்வரன் ஓர் அற்புத லீலை செய்தார். நாராயணனின் சங்கல்பமும் அதோடு சேர்ந்தது. பிரம்ம கபாலம் சிவபெருமானின் கரத்திலிருந்து நழுவி, அங்கே ஓடிக் கொண்டிருந்த புனித கங்கையில் விழுந்தது. பிறருக்குப் புண்ணியத்தைத் தேடித் தர, தான் ஒரு பாவம் செய்து, தன்னையே பிக்ஷõண்டியாக்கிக் கொண்ட கருணாமூர்த்தி ஸ்வரூபம்தான் பிக்ஷõடனர் எனும் சிவரூபம். நமது உலகியல் ஆசைகள் மெதுவாக மறைந்து, ஆணவம், பொறாமை, கோபம், குரோதம் போன்ற துர்க்குணங்கள் நம்மிடமிருந்து நீங்கி, நம் ஜீவனெல்லாம் சிவன் நிறைந்திருக்க வேண்டும் என்பதே, சிவபெருமானை வழிபடுவதன் தத்துவம். அந்த நிலையையே சத்-சித்-ஆனந்தம் என சைவ மறைகள் போற்றுகின்றன. அதனை விளக்கும் தோற்றமே பரமேஸ்வரனின் பிக்ஷõடனர் வடிவம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar