|
ஒரு ஊரில் உள்ள கோயில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. ஆலயக் காப்பாளர், என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே.. நீ எப்படி உலகத்தைக் காப்பாய்? என்று புலம்பி அழுதார். அப்போது அங்கே வந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்.. நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக் கொண்ட தெய்வம், இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது விட்டுக் கொடுத்துவிட்டது. உயர்வாக அதை நினைக்கும் நீதான் காப்பாற்றியிருக்க வேண்டுமே தவிர, எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல..! |
|
|
|