|
ஒரு ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மவுனமாக இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான். இரவு நேரம் என்பதால் தவளைகளும், பூச்சிகளும் கத்தத் தொடங்கின. அது சீடனுக்குத் தொல்லையாக இருந்தது. வழிபாட்டில் இருந்து எழுந்து இது என்ன சோதனை... இவை எல்லாம் கத்தாமல் இருக்காதா? என குருவிடன் கேட்டான். நீ ஏன் அவை கத்துவதாக நினைக்கிறாய்? அவற்றின் மொழியில் அவை இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது. இறைவனே உயிர்களின் ஓசையை விரும்புவதால்தானே இவற்றைக் கத்த வைத்திருக்கிறான்.. இதைப்போய் இடைஞ்சல் என்கிறாயே? அமைதியாகச் சொன்னார் குரு. |
|
|
|