|
குருவும் சீடனும் வெளியூர் சென்றனர். இரவாகி விட்டதால் அங்கு ஒரு விடுதியில் தங்கினர். இரவு முழுவதும் அங்கு நாய்கள் ஓலமிட்டுக் கொண்டே இருந்தன அதனால் அவர்களின் தூக்கம் கலைய, சீடன் மிகவும் கோபப்பட்டான். உடனே நாய்களை விரட்டிவிட்டு வருவதாகக் கூறினான். ஆனால் குரு அமைதியாக குரைப்பதும், ஊளையிடுவதும் நாய்களுக்கு இயற்கையான குணம். அவை இருக்கும் இடத்திற்கு நாம்தான் வந்துள்ளோம். எனவே நமக்காக அவை மாற வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? மனிதன் வேண்டுமானால் மற்றவர்களுக்காக செயற்கையாக தன்னை மாற்றிக் கொள்வான். ஆனால் விலங்குகள் அப்படிச் செய்வதில்லை. அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள நாம்தான் பழகிக் கொள்ள வேண்டும்! என்றார். |
|
|
|