|
வயதான ஒருவர் புத்தரிடம் சீடராகச் சேர்ந்தார். பல ஆண்டுகள் கழிந்தன, அந்தச் சீடரும் துறவியாக ஆனார். ஒரு நாள் அவரை அழைத்த புத்தர், துறவியாரே! உங்களுக்கு இப்பொழுது என்ன வயது ஆகிறது! என்று கேட்டார். அதற்கு அவர் ஐந்து வயது ஆகிறது என்றார் வியப்படைந்த புத்தர், உங்களுக்கு எழுப்து வயதுக்கு மேல் இருக்கும் ஆனால் ஐந்து வயதுதான் ஆகிறது என்கிறீர்களே... என்று கேட்டார். உண்மையான ஞானம் எனக்குக் கிடைத்து ஐந்து ஆண்டுகளே ஆகின்றன. உண்மையான அன்பு என் உள்ளத்தில் தோன்றியது இந்த ஐந்து ஆண்டுகளில்தான் இதற்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கனவு போல் எனக்குத் தோன்றுகிறது. எந்தப் பயனும் இல்லாததாகத் தெரிகிறது. ஆகவேதான் என் வயது ஐந்து என்று சொன்னேன் என்றார் சீடர். |
|
|
|