|
துறவி ஒருவர் தினமும் காலை நேரத்தில் ஆற்றில் நீராடி, பின்னர் தன் குடிலுக்குத் திரும்புவது வழக்கம். அப்போது சில நாத்திகர்கள் அவர்மீது குப்பைக் கூளங்களை எறிந்துவிட்டு தெரியாமல் நடந்துவிட்டது போல் பாசாங்கு செய்வர். துறவி இச்செயல் கண்டு இம்மியளவுகூட வருத்தப்படாமல், மறுபடியும் ஆற்றுக்குச் சென்று நீராடி, ஆண்டவனின் அருட்பாக்களை பாடிய வண்ணம் வருவார். இச்செயல் பல நாட்கள் நடந்தன. ஒருநாள் விஷமிகளின் உள்ளத்தில் மன மாற்றம் உண்டாகி. துறவியின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டுமென கெஞ்சினர். அப்போது துறவி உங்களால் தான் இந்த புண்ணிய ஆற்றில் பலமுறை நீராடும் பாக்கியம் கிடைத்தது. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் அமைதியாக. |
|
|
|