|
துறவி ஒருவர் தன் தவ வலிமை, ஆன்மிக ஆற்றல் இவற்றின் மூலம் வறண்டு கிடந்த ஒரு நாட்டை வளம் மிக்கதாக மாற்றினார். நன்றி உணர்வோடு அவரைப் பணிந்த அந்நாட்டு மன்னன் தக்க மரியாதைகளுடன் அவரை அரண்மனைக்கு அழைத்து வந்தான் . அவையில் இருந்த அனைவரும் துறவியின் பெருமையை மாறி மாறி புகழ்ந்தனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த துறவி திடீரென விம்மி விம்மி அழத் தொடங்கினார். பதறிப்போன அரசன் அவரிடம் காரணம் கேட்டான். ஆண்டவன் அருளால் நடந்த இவை அனைத்துக்கும் நானே காரணம் என்பது போல் என்னைப் புகழ்ந்து என் சுமையைக் கூட்டுகிறீர்களே அதை நினைத்துத்தான் அழுகிறேன்! என்றார் துறவி.
|
|
|
|