|
ஆசிரமம் ஒன்றில் உள்ள சீடன் ஒருவன் பூஜைக்கு உரிய மலர்களை முகர்ந்து பார்ப்பதைக் கண்ட துறவி அவனைக் கடிந்து கொண்டார். அவர்கள் ஒருநாள் காட்டுப் பாதையில் சென்றபோது, காட்டுவாசி ஒருவன் பூக்களைக் கசக்கியும் பிய்த்தும் எறிந்து கொண்டிருந்தான். அதைக் கண்ட சீடன், துறவியிடம் இவன் செய்வதையும் நீங்கள் கண்டிக்கலாமே..! எனக்குதர்க்கமாகக் கேட்டான். புன்னகைத்த துறவி மகனே, ஒரு செயலைக் குழந்தை செய்வதற்கும் அதே செயலைப் பெரியவர்கள் செய்வதற்கும் வேறுபாடு உண்டு. அவற்றை ஒப்பிடுவதே கூடாது. இந்தக் காட்டுவாசி பக்திப்பாதையில் இன்னும் நடக்கவே ஆரம்பிக்காத குழந்தை நிலையில் இருப்பவன். ஆனால் நீ அப்படி அல்ல; புரிகிறதா? என்று சொல்ல, உணர்ந்தான் சீடன்.
|
|
|
|