|
ராஜராஜசோழன் ஆன்மிகத்தில் எந்தளவுக்கு உயர்ந்தவனோ, அந்தளவுக்கு அரசு நிர்வாகத்திலும் சிறந்தவன். இவனது காலத்தில் ஐந்து வாரியங்கள் இருந்தன. சம்வத்சர வாரியம் வழக்குகளை விசாரிக்கும். ஏரி வாரியம் வாய்க்கால், குளக்கரைகளைப் பாதுகாக்கும். நிலவளம் குறித்து ஆய்வு செய்து தீர்வளிப்பது தோட்ட வாரியம். பொற்காசுகளையும், செப்புக்காசுகளையும் ஆய்வு செய்து போலிகளைக் கண்டுபிடிப்பது பொன் வாரியம் (எப்பவுமே ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்திருக்காங்க) நிலவரிகளை வசூலிப்பது பஞ்சவார வாரியம். இந்த வாரியங்களுக்கு நேர்மையாளர்களை நியமித்தனர். இவர்களை கண்காணிக்க ஒரு சபை இருந்தது.
சபையினர் கேட்கும்போது, வாரியங்கள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.கணக்காளருக்கு சம்பளம் என்ன தெரியுமா? தினமும் ஒருநாழி நெல், வருடத்துக்கு ஏழரை கழஞ்சு (37.100 கிராம்) தங்கம் போனஸ், இரண்டுசீருடை. கணக்கை வாசிக்கும் போது, என் மனதறிந்து இதில் தவறேதுமில்லை. யாருக்கும் சலுகை காட்டவில்லை, என உறுதியளிக்க வேண்டும். சும்மாவா! பழுக்கக் காய்ச்சிய கோடரியை கையில் பிடித்துக்கொண்டு சொல்லவேண்டும். கணக்கை முடித்ததும், கையில் காயம் படாமல் இருந்தால் ஏழேகால் கழஞ்சு (உத்தேசமாக 38 கிராம்) தங்கம் சிறப்பு போனஸ். காயம் பட்டாலோ கழுதை மேல் ஏற்றி, சாட்டையால் அடித்து ஊர்வலம், பத்து கழஞ்சு (53 கிராம்) தங்கம் அபராதம் வேறு. கட்டாவிட்டால் சிறை. அந்தக் காலத்திலே ராஜாக்கள் நேர்மையா இருந்திருக்காங்க! இப்ப இதைப்பத்தி பேசுனாலே மனித உரிமையைப் பறிச்சுட்டோமுனு போர்க்கொடி தூக்கிட மாட்டாங்களா என்ன! |
|
|
|