|
பூலோகத்திலுள்ள திருவீழிமிழலை என்னும் தலத்துக்கு வந்தார் திருமால். அங்கே சிவன், பார்வதிதேவியுடன் வீற்றிருந்ததைக் கண்டார். அந்த தலத்தில் பார்வதிதேவிக்கு, விண்ணழி விண்ணுலக விமானத்தை பரிசாக அளித்திருந்தார். அத்தலத்தின் எழில் கண்டு மகிழ்ந்த திருமால், சிவனே! நான் தங்களுக்கு இத்தலத்தில் தங்கி பூஜை செய்ய விரும்புகிறேன், என்றார். உடனே சிவன், லிங்கமாக மாறி அத்தலத்தில் அமர்ந்தார். போதாக்குறைக்கு அம்பாளுடன் கல்யாண கோலத்திலும் காட்சி தந்தார். திருமால் சிவலிங்க வழிபாட்டை ஆரம்பித்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு வந்து பூஜிப்பார். ஒருநாள், ஒரு மலர் குறையவே, தன் கண்ணையே பிடுங்கி சிவனுக்கு சாத்தினார். இதுகண்ட சிவன் மகிழ்ந்து பெருமாளுக்கு காட்சி தந்தார். திருமாலே! உன் பக்தியால் நீர் என்னிலும் மேலானவர் ஆகிவிட்டீர். என் சக்தியை ஒன்று திரட்டி அடக்கிய சக்கரம் ஒன்றைத் தருகிறேன். அதைக்கொண்டு, தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காத்தருள வேண்டும், என்றார். திருமாலும் அந்த சக்கரத்தை ஏற்று, தன் கையில் சுழலவிட்டார். |
|
|
|