|
காட்டு வழியே மாட்டு வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தான் ஒருவன். எதிர்பாராதவிதமாக வண்டிச்சக்கரம் சிறு பள்ளத்தில் சிக்கியது. இழுக்க முடியாமல் திணறியது மாடு. யாராவது வருவார்கள் தள்ளிவிடச் சொல்லலாம் என்று, வண்டியிலேயே அமர்ந்திருந்தான் அவன் நேரம் தான் கடந்ததே தவிர எவருமே வரலில்லை. இருட்டத் தொடங்கியதால் பயந்துபோன அவன் இறைவனை வேண்டத் தொடங்கினான். உதவும்படி கதறினான். அப்போது ஓர் அசரீரி எழுந்தது. வண்டியை விட்டு கீழே இறங்கித் தள்ளு...! அதைக் கேட்டதும் அப்படியே செய்தான் அவன் லேசாகத் தள்ளியதுமே மாடு இழுத்ததில் வண்டி பள்ளத்தைவிட்டு வெளியே வந்தது. சந்தோஷப்படுவதற்குப் பதில், அய்யோ... இவ்வளவு இருட்டிவிட்டதே ... எப்படி வெளியே செல்வது.. யார் துணைக்கு வருவார்...? என்று மறுபடியும் அழ ஆரம்பித்தான் அவன். இப்போதும் அசரீரி எழுந்தது எல்லாவற்றிற்கும் பிறரையே எதிர்பார்க்காமல், உன்னை நம்பி செயல்படு.. நீ அழைக்காமலே நான் வந்து உதவுவேன்..! கடவுள் வாக்கை உணர்ந்த அவன், தன்னம்பிக்கையோடு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.
|
|
|
|