|
ஞானி ஒருவர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தபோது. வழியில் ஒருவன் அவரை வீணாகத் திட்டினான். அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஞானி, அவன் திட்டி முடித்ததும் புறப்பட்டார். ஐயா, தாங்கள் ஏன் அவனது செயலுக்கு பதிலடி தரவில்லை? கேட்டார்கள் சீடர்கள். புயலின் காரணமாக ஒரு மரக்கிளை ஒடிந்து உங்கள் மேல் விழுந்தால், அது மரத்தின் தவறா? புயலின் தவறா? கேட்டார் ஞானி. எல்லோரும், புயலின் தவறு என்றார்கள். அப்படியானால், மனதில் வீசும் கோபப்புயலால் வார்த்தைகளை வீசுபவனை எப்படிக் குற்றவாளி என்பது? சொல்லிவிட்டு அமைதியாக நடந்தார் ஞானி.
|
|
|
|