|
கோயில் ஒன்றில் துறவி ஒருவரின் தலைமையில் தீப வழிபாட்டு விழா நடந்தது. இறைவன் முன் ஏற்றுவதற்காக பலரும் பலவிதமான விளக்குகளை எடுத்து வந்தனர். பிராகாரத்தில் ஓர் இடத்தில் கொஞ்சம் இருட்டாக இருந்தது. கூடவே சற்று பள்ளமாகவும் இருக்கவே, பலரும் அந்த இடத்தல் தடுக்கி விழுந்து, எழுந்து புலம்பியபடியே சென்றனர். பக்தர் கூட்டத்தில் ஏழை ஒருவனும் இருந்தான். அவன் கையில் வெறும் அகல் விளக்கு மட்டுமே இருந்தது. தயக்கத்துடன் அதனை எடுத்து வந்த அவன், பலரும் ஓரிடத்தில் தடுக்கி விழுவதைப் பார்த்தான். தன் கையில் எடுத்துப் போன அகல் விளக்கை அந்த இடத்தில் வைத்து ஏற்றி சிறிது வெளிச்சம் வரும்படி செய்தான். அனைத்தையும் பார்த்த துறவி, அவனை நோக்கி வந்தார், உண்மையான இறை வழிபாட்டைச் செய்வது எப்படி என்று நீ உணர்த்திவிட்டாய்! என்று கூறி அவனை வணங்கினார்.
|
|
|
|