|
தன்நாட்டிற்கு வருகை புரிந்த மகான் ஒருவரிடம், தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்? என மன்னன் கேட்டான். மகான் உடனே அதற்குப் பதில் சொல்லாமல் களிமண், பஞ்சு, சர்க்கரை மூன்றையும் கொண்டு வரச் சொல்லி, தனித்தனியாக ஒவ்வொன்றையும் தண்ணீர் உள்ள கண்ணாடிக் குவளைகளில் போட்டார். களிமண்ணோடு இருந்த தண்ணீர் கலங்கிச் சேறானது. பஞ்சு, முடிந்த அளவு தண்ணீரை உறிஞ்சியது. ஆனால் தண்ணீரின் தன்மையில் எந்தப் பாதிப்பும் இல்லை. சர்க்கரை தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டது. தண்ணீரையும் இனிப்பாக்கியது. இப்போது மகான் விளக்கினார். அரசே! தானும் கெட்டு சமூகத்தையும் கெடுப்பவன் களிமண் போன்றவன். பிறரை உறிஞ்சுபவன் பஞ்சு போன்றவன். தன்னையே கரைத்துக் கொண்டு தான் சேரும் பொருளையும் சுவையுள்ளதாக மாற்றும் சர்க்கரை போன்று சமூகத்தை வாழ வைப்பவன் தான் நல்ல தலைவன்.உணர்ந்து கொண்டான் மன்னன். |
|
|
|