|
குருவிடம் சீடன், ஸ்வாமி! இறைவன் இனிமையானவராக எனக்குத் தோன்றவில்லை. நான் பிற உயிர்களுக்கு உதவி செய்வது போல அவர் உதவி செய்வதாகத் தெரியவில்லை என்றான். உடனே சீடனை குரு, தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த ரோஜாச் செடியிலிருந்து ஒரு மொக்கை பறிக்கச் சொன்னார். சீடனும் பறித்தான். இந்த மொக்கிற்கு சேதம் ஏற்படாமல் அதன் இதழ்களைப் பிரி என்றார், குரு. சீடனும் இதழ்களைப் பிரிக்க முயன்று தோல்வியே கண்டான். மொக்கிலிருந்து இதழ்கள் பிய்த்துக் கொண்டே வந்தன. தலை கவிழ்ந்த சீடன், என்னால் முடியவில்லை என்றான்.இறைவன் இந்தச் செடியிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தால், இதன் மொக்குகளின் இதழ்களை இனிமையாக மலரச் செய்து, எங்கும் மணம் வீசச் செய்வார்? என குரு கேட்க, தன் அறியாமையை நினைத்து வருந்தினான் சீடன்.
|
|
|
|