|
ஒரு காட்டில் துறவி ஒருவர் மான் ஒன்றை மிகவும் பிரியத்துடன் வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த மான் திடீரென்று காணாமல் போனது. தேடித் தேடித் களைத்துப்போன துறவி, கடும் கோபப்பட்டார். வேடர்கள் யாரோதான் தன் மானைத் திருடிப் போய்விட்டதாக எண்ணினார். கண்களை மூடிக் கடவுளை வேண்டியவர், தன் மான் காணாமல்போகக் காரணமானவர், உடனே தன் முன் வரவேண்டும் என வரம் கேட்டார். தன் எதிரே வருபவரே கடுமையாக தண்டித்துப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தபடியே கண்களைத் திறந்தார். அப்போது அவர் முன் ஒரு சிங்கம் நின்றிருந்தது. தன் மான் காணாமல் போகக் காரணம் அதுதான் என்பதை துறவி உணரும் முன்பே சிங்கம் அவரையும் அடித்தது. துறவி அலற....இறைவன் சொன்னார், உன்னை அழித்தது சிங்கம் அல்ல, உன் பழிவாங்கும் உணர்வுதான்..!
|
|
|
|