|
மகான் ஒருவர் ஒரு ஊருக்கு வருகை புரிந்தார். அவரிடம், அவ்வூர்மக்கள் பலரும் பல விஷயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். அந்த ஊரில் உள்ள செல்வந்தன் ஒருவன் வாழ்வின் ரகசியத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் எனக் கேட்டான். துறவி அமைதியாக இருக்கவே, பலமுறை கேட்டு அவரை வற்புறுத்தினான். கடைசியில் அவனைப் பார்த்துப் புன்னகைத்த துறவி, ஒரு விஷயம் ரகசியம் எனும்போது அதை எப்படி மற்றவர்களிடம் சொல்லமுடியும் ? உன் வாழ்வை நீயாக உணரவேண்டுமே தவிர, பிறரால் உணர்த்த முடியாது! உணர்ந்த செல்வந்தன் அமைதியாகத் திரும்பினான்.
|
|
|
|