|
துறவி ஒருவரின் ஆசிரமத்தில் இருந்த ஒரு குழந்தை, பசியால் மடைப்பள்ளியில் இருந்த ஒரு பட்சணத்தை எடுத்துத் தின்றது. அதைப் பார்த்துவிட ஒரு சீடன், குழந்தையைப் பிடித்து யாரும் இல்லாதபோது நீ இங்கிருந்து பட்சணத்தை எடுத்ததை கடவுள் பார்த்திருப்பார். உன் செயலைப் பார்த்துவிட்ட அவர் உன்னிடம் என்ன சொல்லியிருப்பார் எனக் கேட்டு மிரட்டினான். பயந்துபோன குழந்தை மிரளமிரள விழித்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த துறவி அங்கே வந்தார். அன்போடு குழந்தையைப் பார்த்தார். பிறகு குழந்தையிடம் மிகவும் பசிக்கிறதா? அப்படியானால் இன்னும் கொஞ்சம் பட்சணம் எடுத்துக்கொள்! என்றவர், சீடனைப் பார்த்து, இறைவன் இப்படித்தான் சொல்லியிருப்பார்! என்றார். தன் தவறை உணர்ந்த சீடன், தலை கவிழ்ந்தான்.
|
|
|
|