Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காசியபரின் சூழ்ச்சி!
 
பக்தி கதைகள்
காசியபரின் சூழ்ச்சி!

பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவரை, கார்த்த வீர்யார்ஜுனன் என்ற மன்னன் கொன்றுவிட்டான். அதனால் ஏற்பட்ட பகையால் இருப்பத்தொரு தலைமுறை க்ஷத்ரியர்களை அழித்தார் பரசுராமர். அவர்களின் ரத்தத்தை குளம்போல் தேக்கி அதனாலேயே தம் தந்தைக்குப் பிதுர்கடன் செய்ய நினைத்தார். அதனைச் செய்துவைக்க காசியப முனிவரை அழைத்தார். காசியபர் அதற்கு சம்மதிக்காததால் , சினம் கொண்டார், பரசுராமர் நான் மூன்று உலகங்களையும் வென்றவன் எனவே என் ஆளுகைக்கு உரிய இடத்தை விட்டு நீர் உடனே வெறியேறும்..! என்றார். காசியபர் அங்கிருந்து இமயமலை சென்றார்; பரசுராமர் அங்கிருந்தும் அவரை விரட்டினார். தொடர்ந்து மேருமலை உள்ளிட்ட பல இடங்கள் சென்ற காசியபர் அங்கிருந்தெல்லாம் துரத்தப்பட்டார்.

உலகின் கடைக்கோடியில் ஒரு மரத்தின் அடியில் அவர் சோர்வுடன் அமர்ந்தார். அந்த மரத்தின் மேலிருந்த ஒரு பெண் புறா தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆண்புறாவிடம், இது பரசுராமர் பூமி. தகாத செயல் செய்தால் அவரது ஆணை உன்னை அழிக்கும்! என்று எச்சரித்தது. அதை லட்சியம் செய்யாது அத்துமீறிய ஆண்புறாவின் கழுத்தை ஒரு சக்கரம் சுழன்று வந்து அறுத்தது. இதைக்கண்ட காசியபர் பரசுராமர் ஆணைக்கு உட்படாத இடமே இல்லை என உணர்ந்து, வேறு வழியின்றி பரசுராமர் செய்யும் சிரார்த்தத்தினை நடத்திட சம்மதித்தார்.

நல்லபடியாக சிராத்தம் முடிந்ததும் திருப்தியடைந்த பரசுராமர் நீங்கள் என்ன தட்சணை வேண்டுமானாலும் கேட்கலாம்! என்றார் கர்வத்துடன் உடனே காசியபர் நீர் வென்ற உலகமெல்லாம் எனக்குக் கொடும் எனக் கேட்டார். வேறு வழியின்றி அப்படியே கொடுத்தார் பரசுராமர் உடனே என் உரிமையாகிவிட்ட இடத்தில் நீர் இருக்கக் கூடாது என அவரை விரட்டினார் காசியபர். மேற்குக் கடற்கரை சென்ற பரசுராமர் வருணபகவானை வேண்டினார். வருணன் பரசுராமரின் கோடரியை வாங்கி வீசி எறிந்தார். அது போய் விழுந்த இடம் வரை கடல் பின்னடைந்து நிலம் உருவானது. அங்கே பரசுராமர் குடியேறினார். அந்தப் பகுதிக்கு பரசுராம ÷க்ஷத்திரம் என்று பெயர் வந்தது. இந்த வரலாற்றை புராண பாகவதத்திலும் காணலாம். புராண பாகவதமே வியாசபகவான் எழுதியது என்றும். இப்போது வழக்கத்தில் இருப்பது சுக பிரும்மம் சொன்னது எனவும் கருதுகின்றனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar