|
ஜென் குருவிடம் பெரிய வில் வித்தைக்காரனான யேங் ஆணவத்துடன் வந்து, நான் பெரிய வித்தைக்காரன். உங்களைச் சந்திக்க என் நண்பன் அனுப்பினான் என்றான். நீ நல்ல திறமைசாலி என்பதை உன் நண்பன் கூறியுள்ளான். ஆனால், நீ வெல்ல முடியாத ஆளா? இல்லையே! என்றார் குரு. சவாலுக்குத் தயாரா? என்றான் யேங். இரண்டு மலைகளை இணைத்துக் கட்டியிருந்த கயிற்றின் மீது நின்று இலக்கு மீது சரியாக அம்பு எய்தார் குரு. இப்போது, உன்முறை வீரனே என்றார். யேங் கயிற்றில் நடந்து சென்று பாதியில் நின்றபடி வில்லை தூக்கிப் பிடித்தான். கீழே உள்ள பள்ளத்தைப் பார்த்தவன், வெலவெலத்து நடுங்கினான்.என்னால் முடியாது என்று பயந்து இறங்கி வந்து, குருவிடம் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டான். உன் வில்லில் உள்ள உறுதியை மனதிலும் கொண்டுவா என்று கூறி அனுப்பி வைத்தார் குரு.
|
|
|
|