|
கரையோரம் சென்று மனிதன் என்ன செய்கிறான் என்று பார்த்து வருவோம் வா என்று ஒரு மீன் சொன்னது. வேண்டாம், வேண்டாம். மனிதன் நம்மைக் கொன்று விடுவான் என்று மற்றொரு மீன் சொன்னது. அரசே! இன்னும் உனக்கு இந்த மனிதர்களைப் பற்றி புரியவில்லையா?- அந்த மீன் கேட்டது. உனக்கு பெருசா என்ன புரிந்ததுன்னு சொல்லேன் பார்ப்போம் என்று மற்ற மீன் சொன்னது. மனிதன் எதையும் இருக்கும் இடத்தில் தேடமாட்டான். இல்லாத இடத்தில்தான் தேடுவான். நீ வேணும்னா என் கூட வந்து பாரேன் என்று கூப்பிட்டது. இரண்டு மீன்களும் கரைக்கு வர, அதைத் தொடர்ந்து மீன்களின் கூட்டமே கரையை நோக்கி ஓட, வலையை எடுத்துக் கொண்டு மனிதன் மீன் பிடிக்க ஆழ்கடல் நோக்கி சென்று கொண்டிருந்தான். இறைவன் மேலிருந்து இவற்றைப் பார்த்து, மனிதனும் என்னை இப்படித்தான் தேடுகிறான் என்றார். |
|
|
|