|
மகரிஷி யாக்ஞவல்கியரின் அத்யந்த சீடராக விளங்கினார் மகாராஜா. குருவுடனான ஜனகரின் நெருக்கம் கண்டு மற்ற சீடர்கள் பொறாமை கொண்டனர். அவர்களுக்கு, ஜனகரின் ஆன்ம பலத்தை உணர்த்த விரும்பினார் குரு. ஒருநாள் சீடர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். அவரை அன்போடு வரவேற்றார் ஜனகர். பின்னர், எல்லோருமாக தோட்டத்தில் அமர்ந்து உயர்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒருவன் ஓடிவந்து அரண்மணை தீப்பற்றி எரிவதாகக் கூறினான். உடனே சீடர்கள் ஐயய்யோ! எங்கள் துணிகளை அங்கேதானே காயப் போட்டிருக்கிறோம். அவற்றை எடுக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டே ஓடினர். ஆனால், ஜனகர் எவ்விதப் பதற்றமும் இல்லாமல் அமைதியாக குரு சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். திரும்பி வந்த சீடர்களிடம் யாக்ஞவல்கியர் கூறினார்: அரண்மனை எரிவதாகக் கேள்விப்பட்டதும், சாதாரண துணிக்காக பாடத்தைக்கூட கேட்காமல் ஓடினீர்கள். ஆனால், அந்த அரண்மனைக்கே சொந்தக்காரரான ஜனகர் செல்வத்தின் மேல் எவ்விதப் பற்றும் இல்லாமல் அமைதியாகப் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்பொழுதுதாவது யார் உயர்ந்தவர் எனப் புரிகிறதா?
|
|
|
|