|
ஒரு நாட்டில் மக்கள் பலர் சேர்ந்து கோயில் ஒன்றைக் கட்டினர். அதைப் பார்த்த துறவி ஒருவர், பலரிடம் யாசகம் பெற்று அந்தத் திருபணிக்குத் தந்தார். துறவியை மதித்த பணக்காரன் ஒருவன்., தன் பங்காக மதிப்பு மிக்க தங்க நகைகளை அவரிடம் கொடுத்தான். அந்த ஆபரணங்களை, பொதுமக்கள் அளித்த சாதாரணப் பொருட்களோடு சேர்த்துவைத்தார் துறவி. அதிர்ந்து போன செல்வந்தன், அவை மதிப்பு வாய்ந்தவை. தனியாக வைத்துப் பெருமைப்படுத்த வேண்டும் என்றான். இல்லை அவற்றைவிட உயர்வானவை ஏழைகள் தங்கள் வறுமையிலும் அளித்த பொருட்கள்தான். அவற்றில் பக்தியும் அன்பும் உள்ளது. உன் பொருளில் ஆணவம்தான் இருக்கிறது. அவற்றோடு உன் பொருளைச் சேர்த்ததே பெருமைக்கு உரிய விஷயம்தான்! என்றார் துறவி. கர்வம் விட்டு, அவர் காலடி பணிந்தான்; செல்வந்தன்.
|
|
|
|