|
ஒரு நாட்டின் அரண்மனையில் ஞானி ஒருவர் பல மாதங்கள் தங்கியிருந்தார். மன்னர், அய்யா, நீங்கள் சிறந்த ஞானி. நான் இந்த நாட்டின் ராஜா. நான் அனுபவிக்கிறதையெல்லாம் நீங்களும் அனுபவிக்கிறீர்கள். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டான். காலையில் என்னுடன் புறப்படு; உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்! என்றார் ஞானி. இருவரும் புறப்பட்டனர். ஊரின் எல்லை வந்தததும் நில்லுங்கள் சுவாமி...! இத்துடன் என் ஆட்சியின் எல்லை முடிகிறது. மனைவி, மக்கள், அரசாட்சி எல்லாதையும் விட்டு விட்டு உங்கள் பின்னால் வந்திருக்கிறேன் என்றார் ராஜா. இப்போது ஞானி சிரித்துக்கொண்டே, இதுதானப்பா எங்களுக்கும் உனக்கும் உள்ள வித்தியாசம், நாங்கள் முன்நோக்கிப் போய்க் கொண்டே இருக்கிறோம். பின்னால் எங்களுடையது எதுவுமில்லை. நாங்கள் அரண்மனையில் இருந்தபோதும் அது என் மனதிற்குள் இல்லை. இப்போதும் இல்லை. நீ பந்தங்களில் கட்டுண்டு இருக்கிறாய். நான் எல்லாவற்றிலும் விடுபட்டு சுதந்திரமாக இருக்கிறேன் என்றார்.
|
|
|
|