|
ஒரு கொசு சிங்கத்திடம் பறந்து சென்று பேசத் தொடங்கியது. நீ என்னை விட பலசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய் அது தவறு. வா, நாம் இருவரும் சண்டை போட்டுப் பார்ப்போம்! உடனே அது ஙொய் என்று சங்கநாதம் செய்து கொண்டு, சிங்கத்தின் மீது பாய்ந்து அதன் நாசியிலும் தாடைகளிலும் கடிக்கத் தொடங்கி விட்டது. சிங்கம் தன் நகங்களால் முகத்தைப் பிறாண்டியும், தட்டியும் தோலைக் கிழித்துக் கொண்டதில் ரத்தம் வடிந்ததுடன், அது களைத்தும் போயிற்று.
வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டு கொசு பறந்து ஓடி விட்டது. ஆனால் சிறிது காலத்திற்குள்ளாகவே அது ஒரு சிலந்தியின் வலையில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது சிலந்தி அதன் ரத்தத்தை உறிஞ்சத் தொடங்கியது. மிருகங்களில் அதிக வலிமையுள்ள சிங்கத்தையே வென்றவன் நான், ஆனால், இப்பொழுது ஒரு அற்ப சிலந்தி என்னை வதைத்துக் கொண்டிருக்கிறதே! என்று கொசு எண்ணியது.
|
|
|
|