|
வேடன் ஒருவன், ஏரிக்கரையில் விரித்திருந்த வலையில் பல பறவைகள் வீழ்ந்திருந்தன. பெரிய பறவைகளாக அவை இருந்ததால், அவை எல்லாம் சேர்ந்து வலையையே தூக்கிக் கொண்டு பறந்து சென்று விட்டன. அவற்றைத் தொடர்ந்து வேடனும் ஓடினான். வழியில் ஒருவன் அவனைக் கண்டு. நீ எங்கே ஓடுகிறாய்! தரையில் ஓடிக்கொண்டே பறவைகளைப் பிடித்து விட முடியுமா? என்று கேட்டான்.
பறவைகளின் இந்த ஒற்றுமை நீடிக்காது நான் நிச்சயம் பிடித்து விடுவேன் என்றபடியே தொடர்ந்தான் வேடன். அவன் சொன்ன படியே நடந்தது. மாலை நேரம் வந்ததும், பறவைகளில் ஒவ்வொன்றும் அதனதன் கூட்டுக்குச் செல்வதற்காக ஒவ்வொரு திசையில் வலையை இழுத்தது. எல்லாம் சேர்ந்து வலையோடு தரையில் விழுந்தன. உடனே வேடன் அவற்றைப் பிடித்துக் கொண்டு விட்டான்.
|
|
|
|