|
வல்லூறு ஒன்று தன்னை வளர்த்து வந்த எசமானனிடம் பழகி அவர் அழைத்த போதெல்லாம் போய் அவர் கை மணிக்கட்டில் அமர்ந்து கொள்வது வழக்கம். ஆனால், சேவல் மட்டும் அவரை நெருங்குவதில்லை. அவர் அருகில் வந்தவுடனே, அது கூச்சலிட்டுக் கொண்டு ஓடும். வல்லூறு சேவலிடம் பசி வந்தால்தான் நீங்கள் எசமானர்களைத் தேடிப் போவீர்கள். காட்டுப் பறவையாகிய எங்களுக்கு மிகுந்த வலிமை உண்டு. மனிதர்களிடமிருந்து நாங்கள் விலகி ஓடுவதில்லை. அவர்கள் எங்களுக்கு உணவளித்து வளர்ப்பதை நாங்கள் மறப்பதில்லை! என்றது. நீங்கள் மனிதர்களைக் கண்டு ஓடாமலிருப்பதன் காரணம் அவர்களுடைய மேஜைகளின் மீது வேக வைத்த வல்லூறுகளை நீங்கள் கண்டதில்லை; ஆனால் நாங்களோ, வேக வைத்த கோழிகளையும் முட்டைகளையும் அடிக்கடி பார்க்கிறோம்! என்றது, சேவல்.
|
|
|
|