சுவாமி! தர்மங்களில் எல்லாம் தலை சிறந்தது எது? என்று சுவாமி ராமதீர்த்தரிடம் அவரது பக்தன் ஒருவன் கேட்டான். தம்பி! ஒருவன் மற்றொருவனுக்குச் செய்யக்கூடிய தர்மங்களில் எல்லாம் தலை சிறந்தது ஞான தானமே. பசித்த ஒருவனுக்கு இன்று நாம் உணவு கொடுத்தால் நாளையும் அவனுக்குப் பசிக்கும். ஆனால் அறிவைப் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழிலை அவனக்குக் கற்றுக் கொடுக்கச் செய்தால் ஆயுள் முழுவதும் அவன் பிழைப்பதற்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்வான் என்று விளக்கினார் ராமதீர்த்தர். |