|
ஒரு துறவி தன் சீடனுடன் குடிலில் அமர்ந்திருந்தார். ஒரு குடும்பஸ்தர் வந்தார்.சுவாமி! எனக்கு ஆயிரம் கடன்கள். பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வழியில்லை. உடல்நிலையும் சரியில்லை. இந்த பிரச்னை தீர யோசனை கூறுங்கள்... என்று கேட்டார்.அப்பனே! இதுவிதிப்பயன். மாற்றலாகாது. பெருமாள் நாமத்தை மனதார உச்சரி; கஷ்டங்களைக் குறைக்கலாம், என்றார் துறவி.வந்தவர் விரக்தியாய் கேட்டார்.உங்கள் கூற்றுப்படி, விதிப்படி தான் எல்லாம் நடக்குமென்றால், பெருமாளை துணைக்கு அழைப்பானேன்! அவன் நாமத்தை சொல்லுவானேன்!.குரு சிரித்தார்.மகனே! பெருமாள் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் எடுத்தார். மனிதரூபத்தில் இருந்தார். அவர் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றியிருக்க முடியும். ஆனால், அதர்மத்தை நடக்க விட்டதும், பெரும் துன்பப் போராட்டத்திற்குப் பின், தர்மத்தை வெல்லச் செய்ததும். விதியின் வலிமையை உணர்த்துவதற்காகத் தான்! காய்ச்சல் வந்தால், மருந்து சாப்பிட்டு அதைக் குறைப்பது போலத்தான் விதியின் பாதை. அந்தப் பாதையை மாற்ற முடியாது. ஆனால், அதன் கடுமையை குறைக்கவே கடவுளிடம் வேண்டுகிறோம், புரிகிறதா! என்றார்.வந்தவருக்கு நன்றாய் புரிந்தது, மனம் தெளிந்தது. |
|
|
|