|
துறவி ஒருவர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, செல்வந்தர் ஒருவர் வீட்டில் தடபுடலாக விருந்து நடந்தது. துறவியும் அதற்கு அழைக்கப்பட்டிருந்தார். பல வகையான உணவு வகைகள் அதில் பரிமாறப்பட்டன. விருந்து முடிந்தபின் என் ஆசிரம விருந்துக்கு ஈடாகுமா? என்று சொல்லி கிளம்பினார். அதே நகரத்தில் இதைவிடப் பெரிய விருந்து ஒன்று நடந்தது. அதிலும் கலந்து கொண்ட துறவி இதுவும் எனது ஆசிரம விருந்துக்கு இடாகாது என்றார், அங்கிருந்த எல்லோரும் துறவியின் ஆசிரமத்தில் எப்படி விருந்து தருகின்றனர் என்பதை அறிய விரும்பி, அவருடன் ஆசிரமம் வந்தனர். தன் சீடர்களிடம், விருந்துக்கு ஏற்பாது செய்யச் சொன்னார் துறவி. எல்லோரும் விருந்துண்ண அமர்ந்தார்கள். இலையில் ரொட்டியும் சிறிது உணவும் பரிமாறப்பட்டன. எரிச்சல் அடைந்த அவர்கள், துறவியாரே! இதையா சிறந்த விருந்து என்று சொன்னீர்? ஆம் அதில் என்ன ஐயம்? எனக்கப் பிடித்த உணவை நான் உண்கிறேன். என் விருந்தினர்க்கும் அதையே கொடுத்து மகிழ்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் வசதியைக் காட்டவும், பெருமைக்காகவும் விருந்து படைக்கிறீர்கள். அது விருந்தே ஆகாது. நம் வீட்டில் உள்ள எளிய உணவை உள்ளன்போடு கொடுத்து உபசரிப்பதுதான் உண்மையில் உயர்ந்த விருந்து ! என்றார்.
|
|
|
|