|
கொடுங்கோல் மன்னன் ஒருவன் மகான் ஒருவரைக் கண்டு, மகானே! என் கண்களில் ஒன்று செயற்கையானது. அது எதுவென்று கூறினால் பரிசு தருகிறேன்! என்றான். உற்றுப் பார்த்த மகான், உங்கள் இடது கண்தான் செயற்கையானது என்றார். மன்னன் வியப்புடன் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? என்றான். அந்தக் கண்ணில்தான் சிறிது கனிவு தெரிகிறது! என்றார் மகான் அமைதியாக.
|
|
|
|