Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பிரம்மச்சாரியின் காதலி!
 
பக்தி கதைகள்
பிரம்மச்சாரியின் காதலி!

இந்நாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றே தான் வாழும் இந்த உலகிலே என்பார்கள். இது நிஜம் என்பது புராணக்காலத்திலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம்... பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கும் ஒரு காதலி இருந்தாள். இவள் தான் மஞ்சமாதா என்பது ஐயப்பபக்தர்களுக்கு தெரியும். ஆனால், மஞ்சமாதாவின் கதை தெரியுமா! பந்தளராஜாவுக்கும் மக்களுக்கும் உதயணன் என்ற கொள்ளைக்காரன் தொல்லை கொடுத்து வந்தான். அவனை அடக்கும் வழி தெரியாமல் ராஜா திண்டாடினார். ராஜாவுக்கு ஒரு தங்கை இருந்தாள். இவளையே உதயணன் கடத்திச் சென்று விட்டான். தங்கையை இழந்த ராஜாவிடம், அரண்மனையில் பணிசெய்த இளைய பூஜாரியான ஜெயந்தன் என்பவன், நான் போய் உங்கள் தங்கையை மீட்டு வருகிறேன், என்றான். ராஜாவும் அனுமதி அளித்தார். ஜெயந்தன் பூஜாரியாயினும் மனதைரியமும் உடையவன். காட்டுக்குள் சென்று உதயணன் இருக்குமிடத்தை  கண்டுபிடித்து, ராஜாவின் தங்கையை மீட்டான். ஆனால், இதற்கு சில மாதங்கள் ஆகி விட்டது. தன் தங்கையும், ஜெயந்தனும்
உதயணனால் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காட்டில் அவர்கள்மிருகங்களிடம் சிக்கி இறந்திருக்கலாம் எனக்கருதிய ராஜா, இனி அவர்கள் வரமாட்டார்கள் எனக்கருதி தங்கைக்கு திவசம் செய்துவிட்டார்.

இந்த சமயத்தில் காட்டுக்கு ஒரு முனிவர் சென்றார். அவர், ஜெயந்தனையும் ராஜாவின் தங்கையையும் சந்தித்தார். ராஜாவின் தங்கையிடம், நீ இறந்து விட்டதாக ராஜா நினைத்து, உனக்கு திவசமே செய்துவிட்டார். திவசம் செய்தவர்களை அரண்மனையில் சேர்க்கமாட்டார்கள். எனவே, நீங்கள் திருமணம் செய்துகொண்டு காட்டிலேயே வாழுங்கள், எனச்சொல்லி விட்டார். இதையேற்று, ஜெயந்தனும், அந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஒருசமயம், பந்தளராஜா காட்டுக்கு வருவதாக அவர்களுக்கு செய்தி கிடைத்தது. தாங்கள் அவர் கண்ணில் படக்கூடாதென்றும், குழந்தையாவது நல்லபடியாக அவரிடம் வளரட்டுமென்றும் கருதி, குழந்தையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டி காட்டில் போட்டுவிட்டு மறைந்து கொண்டனர். காட்டிற்கு வந்த குழந்தையில்லாத ராஜா, எங்கோ குழந்தையின் அழுகுரலும், மணிச் சத்தமும் கேட்டு அங்கே வந்தார். செக்கச்சிவந்த அந்த தெய்வக்குழந்தையை தூக்கிக் கொண்டு அரண்மனை சென்று ராணியிடம் ஒப்படைத்தார். அவனுக்கு
மணிகண்டன் என பெயரிட்டனர். ஐயப்பன் என்ற பெயரும் உண்டு.

ஐயப்பன் குருகுலத்துக்கு படிக்கச் சென்றார். அவரது அழகில் குருவின் மகளான லீலாவதி மயங்கினாள். மணிகண்டா! மணந்தால் உன்னையே மணப்பேன், இல்லாவிட்டால் உயிர் துறப்பேன், என அவரிடமே நேரில் சொன்னாள். பெண்ணே! குருவின் மகளைக் காதலிப்பது பெரும் துரோகம். இந்த உலகத்திலேயே பெரும் பாவ வினையைத் தரக்கூடியது குரு துரோகமே! அது மட்டுமல்ல! நான் இந்த பூமியில் குறைந்த காலமே வாழ்வேன். நீ ஒரு காலத்தில் மகிஷி என்னும் அரக்கியாய் பிறந்தாய். ஆணுக்கும், ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மடியவேண்டும் என்று வரம் பெற்றாய். அதன்படி, நான் சிவவிஷ்ணு குழந்தையாய் சாஸ்தா என்னும் பெயரில் பிறந்து உன்னைக் கொன்றேன். எனது தெய்வீக
ஸ்பரிசத்தால் உலகிலேயே மிக உயர்ந்த மானிடப்பிறவியை நீ அடைந்துள்ளாய். சிறந்த ஒரு குருவுக்கு மகளாகப் பிறந்தாய். இதை  பயன்படுத்தி முக்தியடைய முயற்சி செய், என்று புத்திமதி கூறினார். என்ன சொன்னாலும் அவளது காதுகளில் அந்த அறிவுரை ஏறவில்லை. உன்னை மணந்தே தீருவேன். அதற்கு ஒரு வழி சொல், என்றாள். சரி! உன்னை மணக்க நான் தயார்! நான் சபரிமலை சென்று சாஸ்தாவின் ஜோதி ஒளியில் கலந்து விடுவேன். என்னை என் பக்தர்கள் வழிபட மலைக்கு வருவார்கள். எந்த ஆண்டு கன்னிசாமிகள் வரவில்லையோ அந்த ஆண்டு உன்னை நான் மணக்கிறேன். அதற்கு அடையாளமாக என் பக்தர்கள் அம்பு ஒன்றைக் கொண்டு வந்து சரங்குத்தி என்ற இடத்தில் குத்துவார்கள். நீ ஆண்டுதோறும் அங்கு சென்று பார். எந்த ஆண்டில் அம்பு இல்லையோ அந்த நாளில் உன்னை மணக்கிறேன். அதுவரை என் சன்னதி அருகில் மாளிகைப்புறத்தம்மன், மஞ்சள்மாதா என்ற பெயரில் தங்கியிரு, என்றார். இன்றுவரை அம்புகள் குவிவது நிற்கவும் இல்லை. குரு மகளின் சபதம் பலிக்கவும் இல்லை. கன்னி ஐயப்பன்மார்களுக்கு அவள் பல சோதனைகளைத்தருவாள். அதையெல்லாம், ஐயப்பனின் துணையுடன் கடந்து பக்தர்கள் இன்று வரை ஐயப்பனை வணங்கி வருகிறார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar