Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உடைந்தது ஒரு முகம்!
 
பக்தி கதைகள்
உடைந்தது ஒரு முகம்!

கவனச் சிதறல்கள் எதுவுமின்றி மனத்தை ஒருமுகப்படுத்த வழி தேடிக்கொண்டிருந்தார் நண்பர். இதற்காக இஷ்டமித்ர பந்து ஜனங்களிடம் கருத்துக் கணிப்பும் நடத்தினார். சத்சங்கத்தில் கலந்துகொள்ளுங்கள். முக்கியமாக, உபன்யாசம் நடக்கும் இடத்துக்குப் போகவும்... என்று மெஜாரிட்டி அபிப்பிராயம் சொன்னது. ஏரியாவில் இருக்கும் சபாவில், பிரபல உபன்யாசகரின் ராமாயணக் கதை. நண்பர் அங்கே போவதென முடிவு செய்தார். மனத்தை அலைபாய விடக்கூடாது என்பது அவர் எடுத்துக்கொண்ட சங்கல்பம். நண்பர் செல்லும் வழியில் டிராஃபிக் ஜாம்! கார் நகருவேனா என்றது. குறித்த நேரத்துக்குள் போகவேண்டுமே என நண்பரின் மனம் அலைபாயத் தொடங்கிவிட்டது. எப்படியோ பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு, ஓட்டமும் நடையுமாக அரங்கத்துக்குள் நுழைந்தார். தசரதனிடம் கைகேயி வரங்கள் கேட்கும் கட்டம். வால்மீகியையும் கம்பனையும் மேற்கோள் காட்டி, மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக அயோத்திச் சூழலை உபன்யாசகர் கண்முன் நிறுத்த, நண்பர் மனம் லயித்தார்.

எட்டு மணிக்கு சபா நிர்வாகிகளில் ஒருவர் மேடைக்கு வந்து, ராம பட்டாபிஷேகப் படத்துக்கு கற்பூர ஆரத்தி காட்டினார். உபன்யாசகர் லின்க் விட்டுப் போகாமல், கதையைத் தொடர்ந்துகொண்டே கற்பூரத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அடுத்து, நிர்வாகி ஆடியன்ஸ் பக்கம் திரும்பி கற்பூரத் தட்டை உயர்த்திக் காட்ட, பக்த கோடிகள் இருந்த இடத்திலிருந்தே பாவனையாக தொட்டு வணங்கினார்கள். அடுத்த, இரண்டாவது நிமிடம், கற்பூரத் தட்டைக் கையில் ஏந்தி, ஆடியன்ஸ் இருப்பிடத்துக்கு வந்தார் அன்பர் ஒருவர். அவரவர்கள் சட்டைப் பையைத் துழாவி, கையில் கிடைத்த ரூபாய் நோட்டை தட்டில் போட்டார்கள். சிலர் ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களைப் போட, டண்.....டண்.....என்று சத்தம் எழும்பியது. கதையில் பதிந்திருந்த நண்பரின் கவனம் கலைந்தது. ராமன் மர உடை தரித்ததையும், இலக்குவனும் சீதாபிராட்டியும் அவருடன் புறப்படத் தயாரானதையும் அவர் அறிந்தார் இல்லை!

வசூல் முடிந்து, காசுக் குவியலோடு தட்டு அரங்கம் விட்டு வெளியேறிய நேரத்தில், ஆயிரம் ராமர் நின் கீழ் ஆவரோ தெரியேனம்மா.. என்று பரதனுக்குப் புகழாரம் சூட்டிக்கொண்டிருந்தான் குகன். உபன்யாசகர் கதையை அத்தனை வேகமாக நகர்த்திச் செல்ல, நிறையக் கோட்டைவிட்டுவிட்டோமோ எனக் கலக்கமுற்றார் நண்பர். சே! மனசை ஒருமுகமா திருப்பலாம்னு போனா, பல முகமா சிதறிப் போச்சே! இவர்கள் இப்படித் தட்டேந்தி தொந்தரவு செய்வதற்கு பதிலாக, வெளியில் ஓர் உண்டியல் வைத்திருக்கலாம். அல்லது, அன்பர்கள் உள்ளே நுழையும்போது குரு தட்சணை கவர் கொடுத்து, பெயர் முகவரி ஃபில்லப் பண்ணச் சொல்லி வாங்கிக் கொள்ளலாமே! என்று, மறுநாள் என்னிடம் யோசனை தெரிவித்தார் நண்பர். எனக்கும் அது சரி என்றே பட்டது. ஆனால், சபா ஆசாமிகளுக்குப் படவேண்டுமே?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar