|
கடற்கரையில் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். சிறியதும் பெரியதுமாக அலைகள் மாறிமாறி வந்தன. மிகவும் பெரிதாக வந்த சில அலைகளைக் கண்டு பயந்து பின்னால் நகர்ந்து ஒதுங்கினான் அவன். அப்போது மீனவச் சிறுவன் ஒருவன், சிறிய கட்டுமரத்தை கடலுக்குள் செலுத்தத் தயாரானான். அவனைப் பார்த்த அந்தச் சிறுவன், ஓரத்திலேயே இவ்வளவு அலையடிக்கும் கடல், உள்ளே எவ்வளவு பயங்கரமாக கொந்தளிக்கும். அதில் எப்படி நீ பயப்படாமல் செல்கிறாய்? என்று கேட்டான். அவனைப் பார்த்துச் சிரித்த மீனவச் சிறுவன் சொன்னான்; நீ நினைப்பதுபோல் கடல் அவ்வளவு மோசமானது அல்ல. காற்றுதான் அதனை இப்படிச் சிடீற வைத்திருக்கிறது. உண்மையில் கடல் மிகமிக அமைதியானது. கரையில் நிற்காமல் உள்ளே சென்று பார்த்தால் உனக்கே அது புரியும்.. மனமும் கடல் போன்றதுதான். அதன் ஆற்றல், மனதின் உள்ளே அதாவது ஆழ்மனதினுள் செல்பவர்களுக்கு மட்டுமே புரியும். எல்லோருக்குமே மனம் இருக்கிறது. என்றாலும், கட்டுமரத்தினால் கடலில் ஆதிக்கம் செலுத்தும் மீனவர்களைப் போல், தன்னம்பிக்கையுடன் தன்னை வசப்படுத்துவர்களுக்கே தன் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்திப் பயன் அளிக்கிறது மனம்.
|
|
|
|