|
அரசன் ஒருவன் ஆராயாமல் இரண்டு துறவிகளை சிறையில் அடைத்து விட்டான். பின்னர் மனம் திருந்தி அவர்களை விடுதலை செய்தான். வெளியே வந்த முதல் துறவி மற்றொரு துறவியிடம், நீ அரசனை மன்னித்து விட்டாயா? என்று கேட்டார். இல்லை! என்றார் இரண்டாமவர் உடனே முதல் துறவி மெதுவாக அப்படியானால் நீ இன்னமும் அரசனின் சிறையில்தான் இருக்கிறாய் என்றார். ஆமாம்... நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர் இல்லை. நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள்.
|
|
|
|